அன்புடையீர் வணக்கம் .பீர்க்கன்காரணை பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு கழக நிர்வாகிகள், இளைஞர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி மாணவர் அணி, மகளிர் அணி, நிர்வாகிகளுக்கு அன்பான வேண்டுகோள்.வருகின்ற (07:08:2020) வெள்ளிகிழமை அன்று தலைவர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கழக நிர்வாகிகள் அவரவர் வீட்டின் முன் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தவும் வார்டு செயலாளர்கள் அவரவர் வார்டுகளில் உள்ள கொரோனா எதிர்ப்பு கள பணியாளர்களுக்கு உதவிகள் வழங்கி கவுரவப்படுத்தவும்
பிறகு அன்று காலை 09:30 மணி அளவில் பீர்க்கன்காரணை பேரூர் கழகம் சார்பில் கலைஞர் நெடுஞ்சாலையில் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.
பின்பு , கொரோனா நோய் தொற்று காலத்தில் தங்கள் உயிர்களை பொருட்படுத்தாமல் நமக்காக பணியாற்றிய , மருத்துவர்கள், சுகாதார செவிலியர்களுக்கு, தூய்மை பணியாளர்களுக்கும், பீர்க்கன்காரணை பேரூர் கழகம் சார்பில் கௌரவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. பின்னர் பீர்க்கன்காரணையில் அமைந்துள்ள நவஜீவன் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கும் நிகழ்வும் மற்றும் குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூர்/ல் அமைந்துள்ள டேஸ்லிங் ஸ்டோன் ஆதரவற்றோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது. எனவே கழகத் தோழர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பு. பேரூர் கழகத்தால் வழங்கப்படும் தலைவர் கலைஞர் அவர்களின் சாதனைகள் அடங்கிய துண்டுப் பிரசுரத்தை வட்ட கழக செயலாளர்கள் இன்று அவரவர் வார்டுகளில் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அன்புடன்என்றும் கழகப்பணியில்லயன் ஆர் எஸ் சங்கர், B.com LLB வழக்கறிஞர் பேரூர் கழகசெயலாளர் பீர்க்கன்காரணை பேரூர் திமுக. காஞ்சி வடக்கு மாவட்டம்.
ஆகஸ்ட் 7-ஆம் தேதி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாள்
Reviewed by Mohammed Sherif
on
August 07, 2020
Rating:



No comments: