கழக தலைவர் அவர்களின் ஆணைப்படி கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி இளைஞர் அணி உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் - லயன் R.S. சங்கர் திமுக பீர்க்கன்காரணை பேரூர்பேரூர் கழக செயலாளர்.
banner image

ஜூன் 10 அன்று காலை 10 மணிக்கு 10thPublicExam-ஐ நிறுத்தக் கோரி கண்டன ஆர்பாட்டத்தை நடத்துவோம்




பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை  நடத்த திட்டமிட்டு இருக்கும் அதிமுக அரசைக் கண்டித்து, திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டணி தலைவர்கள் சார்பில் , மாண்புமிகு கழக  தலைவர் அவர்களும், தோழமைக்  கட்சி தலைவர்களும் நேற்று வெளியிட்ட  கூட்டறிக்கையில் ,  “இலட்சக்கணக்கான மாணவ, மாணவியரின் எதிர்காலத்துக்காக, வருகின்ற 10.06.2020-ம் நாள் காலை 10 மணிக்கு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள்  அனைவரும் அவரவர் இல்லத்தின் முன்பு ஐந்து பேர் கூடி, தனிமனித இடைவெளியைப் பின்பற்றியும், கொரோனா தடுப்பு உபகரணங்களை அணிந்து கொண்டும் முழக்கங்களை எழுப்புமாறும் கேட்டுக் கொள்கிறோம்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்

கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் அடங்கிய மாவட்டக் கழக நிர்வாகிகள்,  தலைமைச் செயற்குழு - பொதுக்குழு ஒன்றிய - நகர - பேரூர் - ஊராட்சி - வார்டு கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தோழமைக்  கட்சி நிர்வாகிகள் , அனைத்து அணிகளின்  மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் - ஊராட்சி - வார்டு அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள், உள்ளிட்ட கழகத் தோழர்கள் ,மாணவர்கள், பொதுமக்கள் , சமூக நல ஆர்வலர்கள் என அனைவரும் , அவரவர் இல்லத்தின் முன்பு ஐந்து பேர் கூடி, தனிமனித இடைவெளியைப் பின்பற்றியும், கொரோனா தடுப்பு உபகரணங்களை அணிந்து கொண்டும் வருகின்ற 10.06.2020, புதன்கிழமை  அன்று காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டும் என்றும் 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்

 “பத்தாம் வகுப்புத் தேர்வை நிறுத்து! கொரோனா காலத்தில் தேர்வுகள் எதற்கு?"

“விளையாடாதே விளையாடாதே! மாணவர்கள் உயிரோடு விளையாடாதே!”

“கொரோனாவை நிறுத்து! அப்புறம் தேர்வை நடத்து!"

“இன்னுமா வரவில்லை இரக்கம்? தேர்வை ரத்து செய்ய ஏன் தயக்கம்?

என முழக்கமிட்டு அ.தி.மு.க. அரசின் அரசியல் சித்துவிளையாட்டில் இருந்து இலட்சக்கணக்கான மாணவ - மாணவியரைக் காப்போம்  என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...

அன்புடன்
தா.மோ.அன்பரசன், M.L.A.,
மாவட்டச் செயலாளர்,
காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க.


ஜூன் 10 அன்று காலை 10 மணிக்கு 10thPublicExam-ஐ நிறுத்தக் கோரி கண்டன ஆர்பாட்டத்தை நடத்துவோம் ஜூன் 10 அன்று காலை 10 மணிக்கு 10thPublicExam-ஐ நிறுத்தக் கோரி கண்டன ஆர்பாட்டத்தை நடத்துவோம் Reviewed by Mohammed Sherif on June 09, 2020 Rating: 5

No comments:

banner image
Powered by Blogger.